திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி...!
ஒட்டன்சத்திரத்தில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க பழச்சாறு, மோர், இளநீர் ஆகியவற்றை பருகி வந்தனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் இன்று காலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதேபோன்று ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக இருந்த வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.