ஹாங் பு நிறுவனத்துடன் ரூ. 1000 கோடி முதலீடு ஒப்பந்தம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ஹாங் பு நிறுவனத்துடன் ரூ. 1000 கோடி முதலீடு ஒப்பந்தம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்;

Update: 2022-04-07 14:57 GMT

சென்னை,

தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்ட ஹாங் பு  நிறுவனம் தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்துள்ளது.  சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்கிறது எனவும் 
இந்த ஒப்பந்தம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; குறிப்பாக பெண்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என  அமைச்சர் தங்கம் தென்னரசு  கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்