மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

மத்திய அரசு, மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

Update: 2022-04-07 12:38 GMT
கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய அரசானது மின்சாரத்துறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்