முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்த அரசு பள்ளி மாணவருக்கு ரூ.8 ஆயிரம் பரிசு...!
திருவண்ணாமலை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்த அரசு பள்ளி மாணவருக்கு எம்.எல்.ஏ ஒ.ஜோதி ரூ. 8 ஆயிரம் பரிசு வழங்கினார்.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட இலுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் முருகவேல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தினை வரைந்து உள்ளார்.
இந்த மாணவன் தான் வரைந்த ஓவியத்தினை ஒ.ஜோதி எம்.எல்.ஏ.விடம் காண்பித்து உள்ளார். அப்போது மாணவர் முருகவேல் வரைந்த படத்தினைப் பார்த்த எம்.எல்.ஏ ஒ.ஜோதி, அதே இடத்தில் மீண்டும் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்தை வரைய மாணவனிடம் கூறியுள்ளனர்.
சற்றும் தயங்காத மாணவன் முருகவேல் அதே இடத்தில் அமர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் மாணவன் வரைந்த படத்தை பார்த்து மகிழ்ந்த ஒ.ஜோதி எம்.எல்.ஏ மாணவனுக்கு ரொக்க பரிசாக ரூ. 8 ஆயிரம் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து பள்ளித் தலைமையாசிரியர் வி.ஆனந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.