திண்டுக்கல்: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது...!

திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-07 06:30 GMT
தாடிக்கொம்பு, 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில சிறுமிக்கு உடல் நிலை குறைவு காரணமாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருந்ததை உறுதி செய்தனர். 

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இது குறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளனர். அப்போது லாரி டிரைவர் முனியப்பன் (26) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்ததாக அவர் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக  சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் முனியப்பனை தாடிக்கொம்பு போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்