சாத்தூரில் தேங்காய் உடைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்....!

சாத்தூரில் தேங்காய் உடைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-06 10:30 GMT
சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சுங்க கட்டண விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வினால் ஏற்படும் மக்களின் துயரங்களை போக்கவும் சாத்தூர் காளியம்மன் கோவிலில் 101 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்