ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அரசு அதிகாரிகளும், சிறு தொழில் அதிபர்களும், வியாபாரிகளும், இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் இளம் பெண் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் உள்ளூர் தி.மு.க.வினருக்கு பங்கு இருக்கிறது. இதேபோன்று, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாக கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தி.மு.க. பிரமுகர். இவையெல்லாம் ஆளுங்கட்சியினரால் ஏற்படும் அராஜக செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. எனவே, ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.