சட்டசபை முற்றுகை போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாளை மறுநாள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று சிவா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாளை மறுநாள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று சிவா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கு பாதிப்பு
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் கேட்டதற்கு பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. அதை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின் றன என்று கூறினர். ஆனால் 5 மாநில தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்வு முடிவுக்குப்பின் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அத்துடன் டோல்கேட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும்.
சட்டசபை முற்றுகை
இதுமட்டுமின்றி மத்திய அரசு 850 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விலையையும் 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு என்பது மக்கள் தொடர்ந்து கார்ப்பரேட்டு களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பதை போல உள்ளது.
எனவே மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், மின்துறை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை கைவிட்டு நிரந்தரமாக எடுக்க வலியுறுத்தியும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புதுவை சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இ்தில் மாநில கழக நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.