நெல்லை: அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்....!
அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
அம்பை,
அம்பாசமுத்திரம் பகுதியில் பங்குனி திருவிழா 10- நாள்கள் விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பொதுமக்கள் அனுமதி இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. அரசின் தளர்வுகளை தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
அம்பை காசிநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணவேணி முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் ஆன்மீக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவிலும் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் முக்கிய திருவிழாவான 8-ம் திருநாள் என்று சிவபெருமான் நடராஜர் கோலத்தில் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுக்கும் வைபவம், தொடர்ந்து தேரோட்டம், தீர்த்தவாரி நடைபெறும்.
இதேபோன்று அம்பை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.