வேலூர்: சாலையோரம் நின்ற தொழிலாளர்கள் மீது மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு....!

வேலூர் அருகே சாலையோரம் நின்ற தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-04-05 05:30 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ராமாலை பகுதியை சேர்ந்த பாபு (வயது 45), கஜேந்திரன் (60), வினோத்குமார் (30) ஆகிய 3 பேரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த 3 பேரும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக ராமாலை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். 

அப்போது குடியாத்தம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்ற பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிந்த பாபு, கஜேந்திரன்,  வினோத்குமார் ஆகியோர் மீது மோதியது.  இந்த விபத்தில் கூலித்தொழிலாளி பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிர் விரைந்து வந்த காயம் அடைந்த 2 தொழிலாளர்களையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரும் விபத்துக்கு உள்ளானது. ஆனால் அதில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். 

இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளர்களின் உறவினர்கள் குடியாத்தம் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குடியாத்தம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் குடியாத்தம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்