தேனி ,தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
தேனி ,பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் இயங்கி வருகிற தனியார் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது .
இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த மூலப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது
10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தீ விபத்தில் 4,000 டன் அளவிலான மூலப்பொருட்கள் சேதமடைந்துள்ளன