அரியலூர்: சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது....!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-04-05 03:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் திருப்பூர் காட்டன் என்ற ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில்  கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 29) என்பவர் கடந்த 7 மாதங்களாக வேலை பார்த்து வருகின்றார். அதே கடையில் 16 வயது சிறுமியும் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் கடையில் பணியாற்றிய அந்த 16 வயது சிறுமியை தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உள்ளார்.

இவர்கள் பஸ்சில் செல்வதற்காக பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நின்றனர். நீண்ட நேரமாகியும் பஸ் வராததால் இவர்கள் இருவரும் பஸ் நிலையத்தில் காத்திருந்து உள்ளனர். 

இதனை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், அருகே உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து உள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பஸ் நிலையத்தில் காத்திருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் சிறுமியிடம்  விசாரணை நடத்தினர்.

அப்போது தமிழ்ச்செல்வன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்றது போலீசாருக்க தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போக்சோவில் கைது செய்து  சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்