சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9-ஆம் தேதி தாக்கல்

2022 -23ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது;

Update: 2022-04-05 02:33 GMT

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில் 2022 -23ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில்  காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது .
மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார் .பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே  நடைபெற உள்ளது .இறுதியில் 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்