சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது

Update: 2022-04-05 01:13 GMT
சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு கடந்த 1-ந்தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 5ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படடும் என தெரிவிக்கப்பட்டது 

அதன்படி  சொத்து வரி உயர்வை கண்டித்தும், வரி உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது 

அதன்படி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.

அதேபோல் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.

மேலும் செய்திகள்