இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் உமறுபுலவர் வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பா என்கிற மொய்தீன் அப்துல்காதர் (வயது 46). இவர் தனது நண்பர் நாகூரைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (45), அவரது மனைவி ராஜாத்தி ஆயிஷா நாச்சியாள் (40). இவர்கள் 3 பேரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் 16 பேரிடம் ரூ.70 லட்சம் மற்றும் 88 பவுன் தங்க நகைகள் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் மொய்தீன் அப்துல்காதரை இன்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.