கார் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
கார் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 43). கார் டிரைவர். நேற்று ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்த தர்மா (35) என்பவர் சிவராஜிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மா, சிவராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மாவை கைது செய்தனர்.