கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-03 17:38 GMT
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை மற்றும் மின்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தொவித்து மத்திய அரசை கண்டித்து அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன்,   சிவராம கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கண்ட உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கேன்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மத்தி  ய அரசை  கண்டித்து வாசகங்கள் எழுதிய பதாகைகளை கட்சி நிர்வாகிகள் வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ரங்கசாமி ஆட்சியில் தான் கொலை, கொள்ளை மற்றும் வழிபறி அதிகளவில் நடக்கிறது. இதற்கு காரணம் வேலையின்மை பிரச்சினை. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதேநிலைமை நீடித்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இதற்கு ஒரே தீர்வு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதுதான், என்றார்.

மேலும் செய்திகள்