கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுவை கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுவை கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிந்தன.
நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே புதுவைக்கு சுற்றுலா வந்த பயணிகள் பலர் பகல் நேரத்தில் தங்கும் விடுதிலேயே முடங்கினர். சில சுற்றுலா பயணிகள் பாரதி பூங்காவில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பொம்மலாட்டம்
இன்று மாலை புதுச்சேரி கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
புதுச்சேரி பழைய துறைமுகம் முதல் தலைமை செயலகம் அருகே உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
புதுவை அரசும், பிரெஞ்சு துணை தூதரகம் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரையில் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பிரான்ஸ் நாட்டு கலைஞர்கள் பிரமாண்ட பொம்மைகளை இயக்கி சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தினர். இதனை கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம்பிடித்தும், பொம்மைகளுடன செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட்
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளிமாநில பதிவெண்கள் கொண்ட கார்கள் உலா வந்தன.
காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மதியத்துக்கு மேல் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கிச் சென்றனர்