திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இன்று திடீரென கடல் 200 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சத்துடன் கடலை பார்த்து வருகின்றனர்.
இதனால், கடலின் அடியில் இருக்கக்கூடிய பாறைகளை தற்போது காண முடிகிறது. கடலில் நீராடுவதற்கு வந்த ஒருசிலர், இந்த பாறைகளின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.
கடந்த அமாவாசை அன்றும் இதே போல திருச்செந்தூரில் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கிய நிலையில், தற்போது இன்றும் 200 அடி தூரம் உள்வாங்கியிருப்பது பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.