ஒப்பந்தக் காலம் நிறைவு: அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மாற்று பணிவாய்ப்பு வழங்க கோரிக்கை
அம்மா மினி கிளினிக் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் தங்களுக்கு மாற்று பணி வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது. அதே சமயம் அவற்றில் பணியாற்றி வந்த 1,800 மருத்துவர்களின் ஒப்பந்தக் காலம் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஓராண்டு கால ஒப்பந்தப் பணி என்ற அடிப்படையில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டதால், 1,800 மருத்துவர்களை பணியில் இருந்து விடுவித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள், தங்களுக்கு மாற்று பணி வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.