நீலகிரி: குடியிருப்பு பகுதியில் இருந்த கஞ்சா செடிகள் பறிமுதல் - போலீசார் விசாரணை

நீலகிரி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-02 16:30 GMT
நீலகிரி,

தமிழகத்தில் குட்கா, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோத்தகிரி அருகே கூக்கல் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது தொழிலாளர் குடியிருப்புக்கு அருகாமையில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு பயிரிடப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வேருடன் அகற்றிய போலீசார், அதனை பறிமுதல் செய்ததுடன், அந்த குடியிருப்பில் இருந்துவரும் 4 வெளிமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்