காரைக்கால் அரசு பள்ளி மாணவனுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல் போக்சோ சட்டத்தில் வழக்கு

அரசு பள்ளி மாணவனுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-02 15:15 GMT
காரைக்கால்
அரசு பள்ளி மாணவனுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் சீண்டல்

காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறான். சம்பவத்தன்று அவன் கழிப்பறைக்கு சென்றான். அப்போது பின்தொடர்ந்து சென்ற 2 ஆசிரியர்கள், மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவன் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளான்.

2 ஆசிரியர்கள் மீது வழக்கு

இந்தநிலையில் ஒரு கட்டத்தில் அந்த மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவித்தான். மேலும் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த மாணவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காரைக்கால் நகர போலீசார் 2 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்