சென்டாக் இறுதிகட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சென்டாக் இறுதிகட்ட கலந்தாய்வு திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-01 18:01 GMT
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த கலந்தாய்வு திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும், 9.30 மணிக்கு அரசு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், 12 மணிக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்