கோவில் திருவிழா - ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் பானை ஊர்வலம்....!

மதுரை அருகே கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-04-01 15:15 GMT
அலங்காநல்லூர், 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோவில்களில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நடந்தது. இந்த விழாவில்  ஆண்கள் மட்டும் கலந்து  கொண்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பொங்கல் வைப்பதற்காக வந்திருந்த ஆண் பக்தர்ளை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் சென்று  பொங்கல் வைத்தனர்.

இதை தொடர்ந்து வாணவேடிக்கையுடன் நகை பெட்டி எடுத்து சென்றனர். பின்னர் செல்லாயி அம்மனுக்கு திருகண் திறந்து, அலங்கர அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.  அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்