தமிழகத்தில் மேலும் 32- பேருக்கு கொரோனா - புதிதாக உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தொற்று பாதிப்பு இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தொற்று ஒரு பக்கம் குறைந்தாலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாகவே நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 857- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 45 பேர் மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. இன்று 27,917- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.