அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி - போக்குவரத்துத் துறை

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-04-01 04:50 GMT
சென்னை,

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 * அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும்.

* பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.

* பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்