செஞ்சி: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கல்லால் தாக்கிய 7-ம் வகுப்பு மாணவி

செஞ்சி அருகே பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-01 02:06 GMT
செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் மகன் திருநாவுக்கரசு (வயது 25). இவர், மாடு மேய்க்க வந்த 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அருகில் கிடந்த கல்லால் திருநாவுக்கரசுவை தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய மாணவி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்