‘‘வன்னியர்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ ராமதாஸ் அறிக்கை
‘‘வன்னியர்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட்டு பட்டியலிட்டுள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது; இடஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
சாதகமான அம்சங்கள்
வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து பல சாதகமான அம்சங்கள் உள்ளன.
வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இடஒதுக்கீடு வழங்க முடியாதவாறு ஐகோர்ட்டு மதுரைக் கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நினைத்தால், தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து பெற்று, புதிதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் பொருள் ஆகும். அந்த வகையில் இது சாதகமானதே.
நான் ஓயமாட்டேன்
சமூகநீதியை வென்றெடுப்பது என்பது இன்று மழை பெய்தால் நாளை செடி முளைப்பது போன்றதல்ல. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தான் சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை உண்மை எனக்குத் தெரியும். வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக 1980-ம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை ஓயவில்லை.
1980-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் போராட்டம் நடத்தி, 21 இன்னுயிர்களை பலி கொடுத்துதான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். நமது சமூகநீதிப் போர் இன்னும் ஓயவில்லை. வன்னிய மக்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்காமல் நான் ஓயமாட்டேன்.
தமிழக அரசுக்கு அழுத்தம்
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் எவ்வளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழல் தெளிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்னியர்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.