கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் அண்ணா கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன், தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலர் பி.கே.ஜோஷி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ந.செல்வகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகளுக்கு பட்டங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்வித்தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்காக 101 பதக்கங்கள் மற்றும் விருதுகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்ததற்காக நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவரான ஆர்.சங்கர் 26 பதக்கங்கள் மற்றும் 2 பண விருதுகளை பெற்றார். மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்கள், பதக்கங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
தேசிய உணர்வு
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு கல்வியாண்டும் பல்கலைக்கழக அளவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதன்மை பெறும் மாணவர்களை சிறப்பிக்கும் பொருட்டு 12 புதிய கல்வி அறக்கட்டளை விருதுகளை அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
வாய்பேச இயலாத விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பது என்பது ஓர் உன்னதமான பணி. பட்டம் பெறும் மாணவர்கள் தொழில்முனைவோர்களாக மாறவேண்டும். தொழில்முனைவோர்களுக்கு உதவ ஏராளமான அரசு நலத்திட்டங்கள் இருக்கின்றன. அதற்கு தேவையான முதலீடுகளுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கின்றன. தொழில் தொடங்குவது தனிநபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும். இந்தியாவின் பாரம்பரியம் ஆன்மிகத்தை மையமாக கொண்டது. சூழலியல் சமத்துவத்துக்கு இதர உயிரினங்கள் மீதும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய தினம் உலக அளவில் இந்தியா வெற்றிநடை போடுகிறது. எப்போதும் தேசிய பார்வையை மனதில் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய அளவில் இல்லாமல் தேசிய உணர்வுடன் சிந்தித்து செயல்படுவது அவசியம். பிராந்திய அளவில் ஏற்படும் முன்னேற்றம் சமவளர்ச்சியை தராது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
பிராந்திய வளர்ச்சி
இந்தியாவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. பிராந்திய வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது. அது ஏற்றத்தாழ்வையே ஏற்படுத்தும். அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டும். அது பிராந்தியம் சார்ந்ததாக இருக்கக்கூடாது.
உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்திய பாரம்பரியம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும், ராணுவ வலிமையிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.