‘மன்மத லீலை’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி - ஐகோர்ட்டு உத்தரவு

‘மன்மத லீலை’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி - ஐகோர்ட்டு உத்தரவு.;

Update: 2022-03-30 18:51 GMT
 சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ‘பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் வினியோக உரிமையை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.4 கோடியே 85 லட்சத்துக்கு வாங்கியது.

அதில் ரூ.2 கோடியே 85 லட்சத்தை வழங்கிய ராக்போர்ட் நிறுவனம், மீதமுள்ள ரூ.2 கோடியை வழங்கவில்லை. இதுதொடர்பாக மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.1 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 732 தரவேண்டும். இந்த நிலையில் ராக்போர்ட் நிறுவனம், அசோக்செல்வன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. எங்களுக்கு தரவேண்டிய தொகையை 24 சதவீத வட்டியுடன் வழங்காமல் மன்மத லீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் மனோஜ் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து, ரூ.30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்மத லீலை படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்