கடந்த 9 நாட்களில் 4 ரூபாய் 64 காசுகள் உயர்வு புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100 ஐ கடந்தது டீசல் ரூ 90 ஐ நெருங்குகிறது

புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது டீசல் ரூ.90-ஐ நெருங்குகிறது

Update: 2022-03-30 16:07 GMT
புதுச்சேரி
கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 4-ந் தேதிக்கு பிறகு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மாற்றாமல் இருந்ததால் அதன் விலையும் அப்படியே நீடித்து வந்தது. இதேபோல் டீசல் விலையும் கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதிக்கு பின்னர் மாறாமல் இருந்தது. 
இந்தநிலையில் உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 22-ந் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 95 ரூபாய் 72 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 84 ரூபாய் 34 காசுக்கும் விற்பனையானது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் கண்டு வருகிறது. 
புதுச்சேரியில்  பெட்ரோல் லிட்டருக்கு 78 காசு உயர்ந்து, 100 ரூபாய் 36 காசுக்கு விற்பனை ஆனது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 66 காசு அதிகரித்து, 88 ரூபாய் 84 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 9 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாய் 64 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் 50 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்