தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் - தென்னக ரெயில்வே எச்சரிக்கை
பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும் என்று தென்னக ரெயில்வே கூறியுள்ளது.
சென்னை,
ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை தேவையற்ற நேரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஓடும் ரெயில்களில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதற்காக ஆயிரத்து 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக ஆயிரத்து 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.