திண்டுக்கல்: பள்ளி கட்டிடம் இடிப்பு - மாணவ-மாணவிகள் போராட்டம்....!

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-30 10:15 GMT
நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்டோர் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலை பணிக்காக பள்ளியின் சில கட்டிடங்கள் அகற்றபட்டது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் ஒரே வகுப்பறையில் தங்க வைத்து படிக்க வைத்து வந்துள்ளனர்.

இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமமடைந்தனர். இதனால் தங்களுக்கு தனி பள்ளி கட்டிட வசதி கேட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் சுகந்தி தலைமையிலாள அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது ஒரு மாத காலத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தனியாக பள்ளி கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

பள்ளி குழந்தைகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்