சென்னையில் 106 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை...!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2022-03-30 00:52 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 9 நாட்களில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்