சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் தி.மு.க. நிர்வாகிகள் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற குழுவின் தி.மு.க. நிர்வாகிகளையும், அக்கட்சியின் நிலைக்குழு, மண்டலக்குழு தேர்தலுக்கான வேட்பாளர்களையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-29 19:06 GMT
சென்னை,

தமிழகத்தில் 6 வருடங்களுக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு, மண்டலக்குழு, உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கணக்குக்குழு தலைவர் பதவிக்கு க.தனசேகரனும், பொது சுகாதாரக்குழு தலைவர் பதவிக்கு சாந்தகுமாரியும், கல்விக்குழு தலைவர் பதவிக்கு பாலவாக்கம் த.விசுவநாதன், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் பதவிக்கு சர்பஜெயாதாஸ் நரேந்திரன், நகரமைப்பு குழுத்தலைவர் பதவிக்கு தா.இளைய அருணா, பணிகள் குழு தலைவர் பதவிக்கு நே.சிற்றரசு, நியமக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ராஜா அன்பழகன், சொ.வேலு ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலக்குழு வேட்பாளர்கள்

இதைப்போல் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற தலைவராக ந.ராமலிங்கமும், துணை தலைவர்களாக ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், டி.எஸ்.பி.ராஜகோபால், கொறடாவாக ஏ.நாகராஜன், பொருளாளராக வேளச்சேரி பி.மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற மண்டலக்குழு தலைவர் பதவிக்கு கீழ்க்கண்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

திருவொற்றியூர்-தி.மு.தனியரசு, மணலி-ஏ.வி.ஆறுமுகம், மாதவரம்-எஸ்.நந்தகோபால், தண்டையார்பேட்டை-நேதாஜி யு.கணேசன், ராயபுரம்- பி.ஸ்ரீராமுலு, திரு.வி.க.நகர்- சரிதா மகேஷ் குமார், அம்பத்தூர்-பி.கே.மூர்த்தி, அண்ணா நகர்-கூபி ஜெயின், தேனாம்பேட்டை-எஸ்.மதன்மோகன், கோடம்பாக்கம்-எம். கிருஷ்ணமூர்த்தி, வளசரவாக்கம்-நொளம்பூர் வே.ராஜன், ஆலந்தூர்-என்.சந்திரன், அடையார்-ஆர்.துரைராஜ், பெருங்குடி-எஸ்.வி.ரவிச்சந்திரன், சோழிங்கநல்லூர்-வி.இ.மதியழகன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்