மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமார் நியமனம் கவர்னர் உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமார் நியமனம் கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு.

Update: 2022-03-29 18:58 GMT
 சென்னை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கிருஷ்ணன் இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட அவர், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான ஆணையை பேராசிரியர் குமாரிடம், கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

ஜெ.குமார், அண்ணா பல்கலைக்கழகத்தில் 29 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இத்தாலியில் உள்ள பர்மா பல்கலைக்கழகத்தில் சிறந்த புதிய கண்டுபிடிப்புக்கான விருது பெற்றுள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்