மே.தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ - வனத்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
தீயை அணைக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் தேக்கு, சந்தரமரங்கள் மற்றும் அரியவகை மூலிகைச்செடிகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், தீ வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், மலைப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.