திருச்சி: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கில் தீ விபத்து

மணப்பாறையில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்து எரிந்தது.

Update: 2022-03-28 07:43 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், படுகைகளம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 27). இவர் நேற்று சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு வந்து விட்டு பின்னர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டார். 

இந்நிலையில் இன்று காலை கடைக்காரர் எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து புகை கிளம்பியது. பின்னர் தண்ணீரை உற்றி அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எறிந்ததில் பைக் சேதமடைந்தது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்