அபுதாபியில் அந்நாட்டு மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அபுதாபியில் அந்நாட்டு மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Update: 2022-03-28 07:04 GMT
அபுதாபி,

நான்கு நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்  மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதலில் துபாய் சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த வகையில், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சனிக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அபுதாபி - தமிழகம் இடையே உள்ள வர்த்தகம் குறித்தும் அந்நாட்டில் உள்ள தமிழர்களின் நலன் குறித்தும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்