தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 5,195 பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி வேலைநிறுத்தம் காரணமாக 31.88% பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-28 06:20 GMT
சென்னை,

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.

தமிழகத்தில் ஓடும் மொத்த 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் 68% அரசு பஸ்கள் இயக்கப்படதாதால் பஸ் நிலையங்களில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கம் மேலும் குறைந்தது. காலையில் 33% பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 32% பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் காலை 8 மணிக்கு 10.02% ஆக இருந்த பஸ்களின் எண்ணிக்கை 10 மணிக்கு 10.93% ஆனது. 

வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

எம்டிசி - 337, எஸ் இ டி சி - 85, விழுப்புரம் - 512 பஸ்கள் இயக்கப்படுகிறது.

காலை 8 மணிக்கு 33% ஆக இருந்த பஸ்களின் எண்ணிக்கை காலை 11 மணி நிலவரப்படி 5,195 பஸ்கள் இயக்கபடுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்