கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது

யாரையும் கொரோனா தொற்று பாதிக்காத நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது

Update: 2022-03-26 18:17 GMT
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 221 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது 4 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 5 பேர் குணமடைந்தனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 348 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2-வது தவணை தடுப்பூசியை 1000 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 70 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 28 ஆயிரத்து 889 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்