“பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை” - பள்ளிக்கல்வித்துறை
பகுதி நேர ஆசிரியர்களை பணி என்பது தற்காலிகமானது தான் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.