திருவாரூர்: வாஞ்சிநாதர் கோவிலில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்....!

திருவாரூர் வாஞ்சிநாதர் கோவிலில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-03-26 11:00 GMT
நன்னிலம், 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அருகே உள்ள திருவாஞ்சியத்தில் அருள்மிகு வாஞ்சிநாத சமேத மங்களாம்பிகா திருக்கோயிலில் உள்ளது. 

இந்த கோவிலில் ஸ்ரீ எமதர்ம ராஜா, சித்ரகுப்தர் அருள்பாலித்து வருகின்றனர். எமனுக்கு என்று தனி சன்னதி கொண்ட இக்கோவிலில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 

கோவிலுக்கு வந்த ரவிசங்கர் எமதர்ம ராஜா, ஸ்ரீ வாஞ்சிநாதர் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்