தமிழகத்தில் ரூ.1600 கோடி முதலீடு செய்ய அமீரக தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

துபாயை வெளிநாடாகக் கருத முடியாத வகையில் இங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-03-26 09:58 GMT
துபாய்,

ஐக்கிய அமீரக தொழில் நிறுவனங்கள் - தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்க ரூ.1,600 கோடி முதலீடு செய்யும் வகையில் அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதற்கான நிகழ்ச்சி துபாயில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு நான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். துபாயை வெளிநாடாகக் கருத முடியாத வகையில் இங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். 

தமிழகத்துக்கும் துபாய்க்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபாய்க்குக் வந்தேன். இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார். 

மேலும் செய்திகள்