திண்டுக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன்-மனைவி தலை நசுங்கி பலி
வத்தலகுண்டு-திண்டுக்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 60). இவரது மனைவி பஞ்சவர்ணம் (56). இருவரும் இன்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் உள்ள தனது மகன் ஜோதிபாசுவை பார்பதற்காக சென்றனர். அப்போது செம்பட்டி அருகே புல்வெட்டி குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அதில் பின்னால் வந்த வாகனத்தின் சக்கரம் ஏறியதில் கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது இறந்தவர்களின் உடலை தூக்க வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் முன்வராத நிலையில், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயண மற்றும் போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவர்கள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.
தகவலறிந்து வந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவர்கள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.