தொழில் அதிபர் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்டு - ஐகோர்ட்டு
தொழில் அதிபரை கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேஷ் என்பவரை கடத்திச்சென்று சித்ரவதை செய்து அவரது சொத்துகளை எழுதி வாங்கியதாக திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீசார் கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
நிராகரிப்பு
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கக்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்த நீதிபதி, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க முடியும்.
போலீஸ் புலன் விசாரணையில் உள்ள ஒரு வழக்கில் இதுபோல பிடிவாரண்டு பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
அதிகாரம் உள்ளது
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். பின்னர், குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் 73-வது பிரிவின் கீழ் புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்க குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று தாவூத் இப்ராகிம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பின்படி, இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 போலீஸ் அதிகாரிகளுக்கும் எதிராக எழும்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.