அ.தி.மு.க.வினர் நீர்-மோர் பந்தல் அமைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பதற்கு நீர்-மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அயராத உழைப்பாலும், அவர் அள்ளி, அள்ளித் தந்த கொடை தன்மையினாலும், கோடிக்கணக்கான கட்சி தொண்டர்களின் தியாகத்தாலும், தமிழக மக்களின் வேண்டுதலாலும் உருவான இயக்கம் தான் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு கட்சியை அல்லும், பகலும் அயராது பாடுபட்டு தன்னையே அர்ப்பணித்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை வரலாற்று சிறப்புமிக்க பல வெற்றிகளை பெற்ற இயக்கமாக உருவாக்கி காட்டினார்.
அந்தவகையில், நம் இருபெரும் தலைவர்களின் பூரண நல்லாசியோடு அ.தி.மு.க. தன்னலம் கருதாமல் பொதுநலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சி பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
குடிநீர், நீர்-மோர் பந்தல்
அ.தி.மு.க.வின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியினரும், தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர்-மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, கட்சியினரும் இப்போதே தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்-மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தை தணிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி நிர்வாகிகளும், கட்சியினரும், பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர்-மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்த பணியினை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.