போலீஸ் விசாரணைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும்
போலீஸ் விசாரணைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான ஒரு பதிவை பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தன் முகநூலில் பகிர்ந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்காவில் உள்ள ஒரு நபரின் பதிவை தான் பகிர்ந்ததாகவும், அந்த பதிவை தற்போது நீக்கி விட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், இந்த வழக்கு விசாரணைக்கு ஒரு முறைக்கூட எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றார். இதனையடுத்து, வருகிற ஏப்ரல் 2-ந்தேதி விசாரணை அதிகாரி முன்பு எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும். அப்போது பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.