கல்லூரி மாணவி தற்கொலை

செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்

Update: 2022-03-25 16:32 GMT
பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி விக்டோரியா. இவரது மகள் திவ்யா (19). கோரிமோட்டில் உள்ள அன்னை தெரசா சமுதாய நலக் கல்லூரியில் பி.பார்மசி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கு அடுத்தமாதம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக தேசிங்கு வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த திவ்யா தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனை தாயார் விக்டோரியா கண்டித்தார். பின்னர் அவர் வெளியில் சென்று விட்டார்.
இதற்கிடையே சிறிது நேரம் கழித்து விக்டோரியா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மின்விசிறியில் திவ்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்