வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் - போக்குவரத்துறை எச்சரிக்கை
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எந்த வித விடுப்பும் அளிக்கப்படாது என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்பும் ரத்து செய்யப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினங்களில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.